animated gif

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • animated gif, பெயர்ச்சொல்.
  1. அசைவூட்ட ஜிஃப்; நகர்பட ஜீஃப்; இயங்கும் ஜிஃப்

விளக்கம்[தொகு]

வரைகலைப் படங்கள் கோப்புகளாக வட்டுகளில் பதியப்படும்போது பல்வேறு தொழில்நுட்ப அடிப்படையில் பதியப்படுகின்றன. அவற்றுள் ஜிஃப் என்பது குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கிறது. வரைகலை மாறுகொள் வடிவாக்கம் (Graphics Interchange Format) என்பதன் சுருக்கமே GIF எனப்படுகிறது. இந்த வடிவமைப்பிலுள்ள வரைகலைப் படங்கள் வட்டுகளில் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஜிஃப் வடிவமைப்பில் அமைந்த வரைகலைப் பட உருவங்களை கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து திரையிடும்போது, அந்தப்படம் உயிரோட்டம் பெற்று இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---animated gif--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=animated_gif&oldid=1832622" இலிருந்து மீள்விக்கப்பட்டது